Asianet News TamilAsianet News Tamil

யார் இந்த சாரதா? திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல பெண்களிடம் ரூ.30 லட்சம் மோசடி!

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல்வேறு நபர்களிடம் 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரிடமிருந்து பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Fraud of 30 lakh rupees by conducting auction in Tirupur; Women struggle to recover money sgb
Author
First Published Feb 4, 2024, 2:06 PM IST

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல்வேறு நபர்களிடம் 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரிடமிருந்து பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் வசித்து வந்த சாரதா என்பவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான ஏல சீட்டுகளை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் சாரதா என்பவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் உறுப்பினராக சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர் இந்நிலையில் சீட்டுகள் முடிவடைந்த நிலையில் சாரதா சீட்டு செலுத்தியவர்களுக்கு தொகையை திருப்பித் தராமல் இழுத்தடிப்பு செய்து வந்த உள்ளதாக கூறப்படுகிறது.

டியர் ஸ்டூடண்ட்ஸ்... ஸ்கிரீன் டைம் குறைய இதைப் பண்ணுங்க... பிரதமர் மோடி கொடுக்கும் எக்ஸாம் டிப்ஸ்!

Fraud of 30 lakh rupees by conducting auction in Tirupur; Women struggle to recover money sgb

இந்த நிலையில் பணம் செலுத்தியவர்கள் சாரதா என்பவரிடம் தங்களது தொகையினை திரும்ப கேட்டபோது சாரதா காலதாமதத்தை கூறி சீட்டு செலுத்தியவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெண்கள் தாங்கள் இழந்த தொகையினை சீட்டு மோசடி செய்து ஏமாற்றிய சாரதா என்பவரிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கு வரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மீண்டும் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்!

Follow Us:
Download App:
  • android
  • ios