குடித்துவிட்டு தாறுமாறாக ஓடிய ஷேர் ஆட்டோவில் சிக்கி கல்லூரி மாணவி பலி
திருப்பூரில் மது போதையில் ஷேர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், பொது மக்களிடம் அடி வாங்காமல் தப்பப்பதற்காக மயக்கமடைந்தவாறு நடித்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். அவரது மனைவி சங்காயி, மகள்கள் கோகிலா மற்றும் ஜனனி என நான்கு பேரும் மருத்துவமனை செல்வதற்க்காக, அவ்வழியே ஆட்டோ ஓட்டி வந்த குணசேகரன் என்பவரின் ஆட்டோவில் கல்லூரி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். ஹவுசிங் யூனிட் என்ற இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது எதிரே மூன்று ஆட்டோக்களில் போட்டிப்போட்டுக் கொண்டு வந்தனர். அதில் ஒரு ஷேர் ஆட்டோ, குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த முருகேசன் ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் இரண்டு ஆட்டோக்களும் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.
7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து கோவை பெண் சாதனை
இந்த விபத்தில் முருகேசனின் இரண்டாவது மகள் ஜனனி, அவரது தந்தை முருகேசன், முருகேசனின் மனைவி சங்காயி, மகள் கோகிலா, ஆட்டோ ஓட்டுனர் குணசேகரன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 5 பேரையும் பொது மக்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடைய கல்லூரி மாணவி ஜனனி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்; 2 மணி நேர திக் திக் பயணம்
அதிவேகமாக வந்து விபத்து எற்படுத்திய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து பொது மக்கள் விசாரிக்கையில், அவர் குடிபோதையில் போட்டி போட்டுக் கொண்டு ஆட்டோவை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர் சின்ன துரையை சரமாரியாக அடித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் திருப்பூர் பூத்தார் தியேட்டர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சின்ன துரையை கைது செய்து திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதனிடையே தான் குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியதை மக்கள் கண்டுபிடித்துவிட்டால் கூடுதலாக அடிவிழும் என்பதை எண்ணி ஓட்டுநர் மயக்கமடைந்தவாறு நடித்ததால் பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர்.