திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கபின், ஏஞ்சலின் ருபீஸியா தம்பதியர். இவர்களுக்கு சுஜன் என்ற 3 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று இவர்களது குழந்தைக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்த முத்தாண்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அங்கன்வாடி மையத்தில் ஊசி போட்டு விட்டு வீடு திரும்பிய நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த 3 மாத குழந்தை சுஜன் உடல் அசைவற்றுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பாட்டிலுக்கு ரூ.10 இல்ல ரூ.20 கூட வாங்குவோம்; திருப்பூரில் மதுக்கடையில் வாடிக்கையாளர் வாக்குவாதம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குழந்தையின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.