போலீசை பார்த்து பதறிய இளைஞர்கள் எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்து; வேடிக்கை பார்த்த போலீஸ் மீது மக்கள் ஆத்திர
சங்கரன்கோவில் பகுதியில் போலீசாரின் வாகன தணிக்கைக்கு பயந்து இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் வேகமாக சென்றதில் எதிரே வந்த வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாடிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாத்மநாதன்(வயது 28), கார்த்திக்(27). இவர்கள் இருவரும் சங்கரன்கோவிலில் இருந்து இருசக்கர வாகனத்தில் வாடிக்கோட்டை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது என்.ஜி.ஓ.காலனி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
காவல்துறையினர் வாகன சோதனைக்கு பயந்து இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கிய போது எதிரே வந்த இறுதியாத்திரை செல்லும் வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பத்மநாதன், கார்த்திக் ஆகிய இருவரும் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளனர்.
அதானிக்கு தாரை வார்க்க தான் பிரதமர் மோடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்கிறார் - ஜோதிமணி விமர்சனம்
விபத்தில் சிக்கியவர்களை மீட்காமல் அதனை அரை மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வந்த இரண்டு ஆம்புலன்களில் இரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
விபத்தில் சிக்கியவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பத்மநாதன் ஏற்கனவே உயிரிழந்ததாகவும், கார்த்திக் உடலில் பல்வேறு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதனால் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காவல்துறையினரின் வாகன சோதனைக்கு பயந்து வேகமாக சென்றதனால் விபத்து ஏற்பட்டு இறந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.