நாட்டிலேயே சுத்தமான காற்று உள்ள நகரங்களில் நெல்லைக்கு முதலிடம்!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, திருநெல்வேலி மாவட்டம் இந்தியாவில் காற்றின் தரம் சிறப்பாக உள்ள இடத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு 33 ஆக உள்ள நெல்லை, டெல்லியின் 357 போன்ற மாசு நகரங்களுக்கு நேர்மாறாக உள்ளது.

Tirunelveli tops Air Quality Index: CPCB data sgb

இந்தியாவில் காற்றின் தரம் சிறப்பாக உள்ள இடங்களில் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தரம் அடிப்படையிலான தரவரிசை மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நகரங்களின் சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு (AQI) ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்ட அந்தத் தரவுகளில் இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள், காற்று மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

சுத்தமான காற்றைக் கொண்ட நகரங்களில் என தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நெல்லையில் காற்றின் தரக் குறியீடு 33 ஆக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது. அந்த தஞ்சையில் காற்றின் தரக் குறியீடு 47.

காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 357 ஆக உள்ளது.

ரயில்வே பட்ஜெட் 2025: நவீன ரயில்களுடன் ஸ்டேஷன்களை மேம்படுத்த முக்கியத்துவம்!

காற்றின் தர குறியீடு (AQI):

காற்றின் தர குறியீடு (AQI) பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 0-50 வரை இருந்தால் பாதுகாப்பானது, 51-100 வரை இருந்தால் திருப்தியானது. சிலருக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் ஏற்படலாம். 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமான மாசு. ஆஸ்துமா, இதயநோய், நுரையீரல் நோய்கள் இருந்தால் மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படக்கூடும்.

201-300 இருந்தால் காற்று மாசு மோசமாகிவிட்டது என்று அர்த்தம். நீண்டநேரம் வெளியில் இருப்பவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும். 301-400 என்பது மிகவும் மோசமான நிலை. அந்தக் காற்றைச் சுவாசித்தால் சுவாச நோய்கள் ஏற்படலாம். 401-450 வரை இருப்பது கடுமையான காற்று மாசு. 450க்கு மேல் இருந்தால், மிகத் தீவிரமானது. ஆரோக்கியமாக இருப்பவர்கள்கூட இந்தக் காற்றால் பாதிக்கப்படுவார்கள்.

ஆண்டுதோறும் ரூ.1,11,000 சம்பாதிக்கலாம்! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios