எவ்வளவு நீரையும் அசராமல் உள்வாங்கிய நெல்லை அதிசய கிணறு.. வரலாறு காணாத பெருமழையால் நிரம்பியது..

நெல்லையில் பல ஆயிரம் கன அடி நீரை உள்வாங்கினாலும் நிரம்பவே நிரம்பாத அதிசய கிணறு, சமீபத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் நிரம்பியது. 

Thirunelvel Ayankulam Magic well filled after extreme heavy rain Rya

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் ஒரு அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த பருவ மழை காலங்களில் எவ்வளவு தண்ணீர் கிணற்றுக்குள் சென்றாலும் அந்த கிணறு நிரம்பவே இல்லை.. கடந்த ஆண்டு விநாடிக்கு 3000 கன அடி நீர் அந்த கிணற்றுள் சென்ற போது அந்த கிணறு நிரம்பவே இல்லை. இதன் காரணமாகவே அது அதிசய கிணறு என்று அழைக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து இந்த அதிசய கிணறு குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஐஐடி குழுவினர் அதிசய கிணறு மட்டுமினிறி சுற்று வட்டாரங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிணறுகளையும் 3 மாதங்களாக ஆய்வு செய்தனர். ட்ரோன் கேமரா, ஜிபிஎஸ் கேமரா, கோப்ரா கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் இந்த ஆய்வு நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த ஆய்வில் கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக உள்ளது என்பதும், மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன், சுண்ணாம்பு பாறைகளில் வேதிவினை புரிந்து அதில் துவாரங்களை உருவாக்கியதும் தெரியவந்தது. மேலும் இந்த துவாரங்கள் நாளடைவில் பெரிய குகைகளாக மாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அயன்குளத்தின் அதியச கிணற்றின் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுவது தெரியவந்தது.

இந்த சூழலில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதே போல் திசையன் விளை பகுதிகளிலும் கனமழையால் காட்ட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளநீர் அதிசய கிணற்றுக்கு திருப்பிவிடப்பட்டது.

 

கடந்த 3 நாட்களாக நீரை உள்வாங்கிய கிணறு, தற்போது நிரம்பியதால் அதன் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. பல ஆண்டுகளாக நீரை உள்வாங்கிய அதிசய கிணறு தற்போது அதிக நீரை உள்வாங்கியதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டை சூழ்ந்த வெள்ளம்... 3 நாட்களாக சிக்கி தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்- மீட்ட காவல்துறை

எனினும் இந்த அதிசய கிணறு, மழை தண்ணீரால் மூழ்க வாய்ப்பே இல்லை என்றும். சுற்றிலும் இருந்த ஜல்லி கற்கள் போன்றவை அதிகாரிகளின் மெத்தனத்தால் உள்ளே விழுந்து தண்ணீரை அடைத்துக் கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios