தாமிரபரணி ஆற்றினை சுத்தம் செய்யும் நிகழ்வானது நாளை மே 4-ல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இதில் கலந்து கொள்ளலாம். 

திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றினை சுத்தம் செய்யும் நிகழ்வானது திருநெல்வேலி மாவட்டம் அருகங்குளம் ஊரில் உள்ள ஜடாயுப் படித்துறையில் நாளை மே 4-ல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.


திருநெல்வேலி மாவட்டம் அருகன் குளம் கிராமம் ஜடாயுப் படித்துறையில் மாதம் தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை தாமிரபரணி ஆறு, ஆற்றங்கரை, ஜடாயுப் படித்துறை மற்றும் மண்டபத்தில் தூய்மைப்பணியானது தொடர்ந்து நடைப்பெற்றுவருகின்றது. மேலும் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியானது நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் 13-வது மாத தூய்மைப்பணியானது நாளை மே 4-ல் நடைப்பெற இருக்கிறது.


முதலாவதாக தாமிரபரணி ஆற்றிற்குள் இருக்கும் குப்பைகளை கழிவுகளை வெளியே எடுக்கிறோம். இருப்பதிலேயே இதுதான் சாவல் நிறைந்த பணி ஆகும். தாமிரபரணி ஆற்றிக்குள் மக்கள் பரகாரம் , சடங்கு என்ற பெயரில் பழைய துணிகளை மற்றும் மண்பாண்டங்களை விட்டுச் செல்கின்றனர். இதனால் ஆறு பெரிய அளைவில் மாசடைகிறது. இந்த ஜடாயுப் படித்துறைக்கு குறைந்த ஒரு நாளைக்கு 50 வாகனங்களில் 500-க்கு மேற்பட்டோர் வந்து பரிகாரங்கள் மற்றும் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்கின்றனர். இவ்வாறு செய்யும் போது பழைய துணிகள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மண்பாண்டங்களை ஆற்றினுள் வீசிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு மக்கள் வீசும் துணிகளை, பிளாஸ்டிக் குப்பைகளை மற்றும் மண்பாண்டங்களை ஆற்றினுள் இறங்கி எங்களது குழுவானது சுத்தம் செய்கிறது. கடந்த ஓராண்டில் 50 டன்-க்கு மேற்பட்ட பழைய துணிகளை, குப்பைகளை எங்களது குழுவினர் ஆற்றில் இருந்து எடுத்திருக்கிறோம். மேலும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மண்பாண்டங்களையும் ஆற்றில் இருந்து எடுத்திருக்கிறோம்.

இரண்டாவதாக தாமிரபரணி ஜடாயு படித்துறை தூய்மைப் பணி செய்து பராமரித்து வருகின்றோம். படித்துறையில் உள்ள குப்பைகளை அகற்றி , சோப்பு கரைகளை உள்ளிட்டவற்றை நீரை கொண்டு சுத்தம் செய்து வருகின்றோம். மூன்றாவதாக ஜடாயுப் படித்துறைக்கு அருகில் உள்ள மண்டபத்தை தூய்மைப் பணி செய்து அதனையும் பராமரித்து வருகிறோம்.


நான்காவதாக தாமிரபரணி ஆறங்கரைப் பகுதியை சுத்தம் செய்து அங்கு மரக்கன்றுகளை வைத்து அவற்றை தொடர்ந்து பராமரித்து வருகின்றோம். ஜந்தாவதாக இந்த பகுதிக்கு வரும் மக்களுக்கு , உள்ளூர் பொதுமக்களுக்கு தாமிரபரணி ஆற்றைப் பாதுகாப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். குறிப்பாக விழிப்புணர்வு பலகைகள் மூலமாகவும், நேரடியாக விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.


இந்த நிலையில் வருகின்ற மே 4-ம் தேதி 13-வது மாத தூய்மைப்பணியானது நடைப்பெற உள்ளது. தாமிரபரணி ஆற்றை பாதுக்காக்கும் எண்ணமுள்ள தன்னார்வலர்கள் இதில் கலந்துகொள்லாம். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த பணியானது நடைப்பெற்று வருகின்றது. இந்த மாதம் வர முடியாதவர்கள் அடுத்த மாதம் கலந்துகொள்ளலாம்" என்றார்.