Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களை ஆபாசமாக பேசிய ஆசிரியை? தட்டிக்கேட்ட HMஐ அடித்து அலறவிட்ட ஆசிரியை

திருநெல்வேலியில் மாணவர்களை ஆபாசமாகிய பேசிய புகாரில் விசாரணை நடத்திய தலைமை ஆசிரியையை பள்ளி ஆசிரியை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

school teacher beat headmaster in tirunelveli vel
Author
First Published Sep 28, 2023, 7:24 PM IST

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜெய செல்வி என்பவர் வேதியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

இவர் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளை மிகவும் அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. தளபதிசமுத்திரம் கீழுர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவரின் பெற்றோர் ஆசிரியை ஜெயசெல்வி மீது, தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார். 

அதிமுக, பாஜக பிரிஞ்சிட்டாங்க; இனி புதுச்சேரில நாம தான் - தொண்டர்கள் மத்தியில் நாராயணசாமி பேச்சு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதையடுத்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஸ்டெல்லா ஜெயசெல்வியிடம் விளக்கம் கேட்டு, மெமோ கொடுத்துள்ளார். அப்போது ஆசிரியை ஜெயசெல்வி மெமோவை கிழித்து எரிந்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பிடித்து பறித்து கையில் கடித்துள்ளார். இதுகுறித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

சென்னையில் அரைகுறை ஓட்டுநரால் இயக்கப்பட்ட கார் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி

அதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் ஆசிரியையிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios