தென்காசி மாவட்டம் கழுகுமலை அருகே இருக்கும் வடக்கு அழகுநாச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். பாத்திர வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மகள் தங்கப்ரியா(16). குருவிகுளம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் இவர், அங்கிருக்கும் அரசு மாணவிகள் விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளார். விடுமுறை தினங்களில் மட்டும் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார்.

குருவிகுளம் அருகே அரசு மாணவிகள் விடுதியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை

தங்கப்பிரியா சரியாக படிக்காமல் இருந்துள்ளார். இதனால் அவரை ஆசிரியர்கள் கண்டித்ததுடன் பெற்றோரையும் பள்ளிக்கு அழைத்து விபரத்தைக் கூறியுள்ளனர். பெற்றோர் முன்னிலையில் ஆசிரியர்கள் கண்டித்ததால் தங்கப்ரியா கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். சக தோழிகளிடமும் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் தற்கொலை செய்து கொள்வதென்று மனைவி தங்கப்ரியா முடிவெடுத்திருக்கிறார். அதன்படி விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறினர். சத்தம்கேட்டு வந்த விடுதி காப்பாளர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மாணவியின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், "எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை, எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 வயது சிறுமியிடம் அத்துமீறிய கிழவன்..! போக்சோவில் அதிரடி கைது..!