தென்காசியில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து குற்றவாளியை கைது செய்த காவல்துறை
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டசை தடயமாக பயன்படுத்தி குற்றவாளியை கைது செய்த மாவட்ட காவல் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவந்தி நகரில் வீடு ஒன்றில் சுமார் 16 பவுன் தங்க நகைகள் திருடு போன வழக்கில் எந்த துப்பும் இல்லாம் இருந்து வந்தது.
மத்திய சிறை முன்பு கூட்டம் கூட்டிய கோவை பாஜக தலைவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
இந்த வழக்கில் குற்றவாளியாக சந்தேகப்படும் பெண் ஒருவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த புகார்தாரர், சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தென்காசி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் பெண் காவலர் தாமரை, பெண் காவலர் மலர்கொடி ஆகியோர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறையை சைவ, வைணவ சமய நலத்துறை என பிரிக்க வேண்டும் - திருமா அறிவுரை
விசாரணையில் வீட்டில் பணி செய்த ஈஸ்வரி என்ற பணியாளரே நகைகளை திருடிவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. நகைகளை திருடியது தெரிய வந்த நிலையில் ஈஸ்வரியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 4.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் தென்காசி காவல்துறையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.