Asianet News TamilAsianet News Tamil

வடமாநில தொழிலாளர்களிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்… கூடங்குளம் போலீஸார் விசாரணை!!

நெல்லை கூடங்குளம் அணு உலையில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்களிடம் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

kudankulam police gutka packets seized from north indian workers
Author
First Published Nov 3, 2022, 12:20 AM IST

நெல்லை கூடங்குளம் அணு உலையில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்களிடம் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில் அணு உலைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: புகைப்பட கலைஞர் வீட்டில் பழங்கால சிலைகள் மீட்பு... டெல்லி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை!!

இதில் வடமாநில தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். மேலும் புதிதாக பலர் வேலைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் வடமாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவிலான குட்கா வைத்திருப்பதாக கூடங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க: வாளால் கேக் வெட்டிய பிரபல ரவுடி.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ !!

அதன்பேரில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், அவர்கள் கொண்டு வந்த பைகளில் தமிழக அரசால் தடை செய்யபட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அந்த குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios