நிரம்பிய மணிமுத்தாறு அணை... தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து 1,500 முதல் 2,000 கன அடி வரை உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட உள்ளது. 

Excess water release in Thamirabarani River: District Collector warns sgb

தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை அதன் முழு கொள்ளளவான 118 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்பியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்படும் என்பதால் கையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் 116.54 அடியாக இருந்த நீர்மட்டம் மாலையில் முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.

இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்ட்ர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு? இதோ முழு விவரம்.!\

Excess water release in Thamirabarani River: District Collector warns sgb

மணிமுத்தாறு அணையில் இருந்து 1,500 முதல் 2,000 கன அடி வரை உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட உள்ளது. நெல்லையில் பல பகுதிகளில் நேற்று முதல் மழை இல்லாததால் வெள்ள அபாயம் எதுவும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இருந்தாலும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

வானிலை மையம் செய்கிற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான்.. இழுத்து மூடிட்டு போங்க.. அன்புமணி ஆவேசம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios