உலகளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 415 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே நாடு முழுவதும் நேற்று சுய ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 75 மாவட்டங்களில் 31ம் தேதி வரை ஊரடங்கை தொடர செய்ய மத்திய அரசு முடிவு செய்து மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து சென்னை,காஞ்சிபுரம், ஈரோடு என மூன்று மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.  இந்த நிலையில் 3 மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க செய்வது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

100 ஆண்டுகளில் இல்லாத சவால்..! தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்க..! மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இதுசம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்தநிலையில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மட்டுமின்றி கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களையும் முடக்க அரசு பரிசீலித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கோவை மற்றும் நெல்லைக்கு வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. விரைவில் தமிழக அரசு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என தலைமை செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சொல்லுறத கேட்கவே மாட்டிகிறாங்க.. இனி அதிரடி நடவடிக்கை தான்..! கொந்தளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!