Asianet News TamilAsianet News Tamil

சொல்லுறத கேட்கவே மாட்டிகிறாங்க.. இனி அதிரடி நடவடிக்கை தான்..! கொந்தளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!

தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர். அவர்கள் கண்காணிக்கப்பட்டாலும், அவர்களால் சமூக பரிமாற்றத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது.  சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

minister vijaya baskar warns people under treatment of corona virus
Author
Salem, First Published Mar 23, 2020, 11:50 AM IST

உலகளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 415 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று சுய ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.

minister vijaya baskar warns people under treatment of corona virus

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதுபடுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதனிடையே மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. காஞ்சிபுரத்தில் கடைகளை அடைக்க ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். மருந்து, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் மூட தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அரசின் உத்தரவை அலட்சியப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், ’தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர். அவர்கள் கண்காணிக்கப்பட்டாலும், அவர்களால் சமூக பரிமாற்றத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது.  சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என பதிவிட்டிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios