2026ல் நான் தான் சி.எம்.. பாஜகவுடன் இணையும் சரத்குமார்? அவரே கொடுத்த ஷாக்! பரபர பின்னணி

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் எங்களுக்கு  இலக்கு அல்ல. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்று நான் முதலமைச்சராக ஆவேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

Alliance with BJP in 2024 parliamentary elections says Sarathkumar at nellai conference-rag

இன்று நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அதன் தலைவரும், நடிகருமான சரத்குமார், “அரசியலில் இருந்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. எனக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்கிறார். ஒரு மகளுக்கு திருமணம் முடித்துக்கொடுத்துவிட்டேன். 

2 மகள்களுக்கு திருமணம் செய்துகொடுக்க வேண்டும். ஒரு மகன் சிங்கப்பூரில் படித்துக்கொண்டு இருக்கிறான். அவனை கரை சேர்க்கணும். ஆனால் என்னை தடுப்பவர் வீட்டில் யாருமில்லை. கடந்த 56 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள்‌ சென்னையில்‌ நீர்வழித்தடங்களை சரியாக செயல்படுத்தவில்லை.

Alliance with BJP in 2024 parliamentary elections says Sarathkumar at nellai conference-rag

இலவசங்கள்‌ வழங்குவதை தவிர்த்துவிட்டு அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கியிருந்தால்‌, இந்த நிலை சென்னைக்கு ஏற்பட்டிருக்காது ஜனநாயகம்‌ மாறி பணநாயகம்‌ வந்துவிட்டது. பணத்தால்‌ அரசாங்கம்‌ நடத்தும்‌ நிலை மாறினால்‌ தான்‌ ஜனநாயகம்‌ மலரும்‌. உலகளவில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்துள்ளதற்கு காரணம் பிரதமர் மோடி தான். பிரதமர் மோடியால் இந்தியாவிற்கே பெருமை. தமிழக முதலமைச்சராக 2026ல் பதவி ஏற்பேன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Alliance with BJP in 2024 parliamentary elections says Sarathkumar at nellai conference-rag

பாஜக உடன் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளது. 2026 தேர்தலில்‌ 234 சட்டமன்ற தொகுதிகளிலும்‌ சமத்துவ மக்கள்‌ கட்சி போட்டியிடும்‌. திராவிட இயக்கங்களின்‌ ஆட்சி தொடர்ந்தால்‌ இன்னும்‌ 1௦ ஆண்டுகளில்‌ தமிழர்களை விரட்டி விட்டு வட இந்தியர்களை வைத்து வாக்களித்து அவர்களே வெற்றி பெறுவார்கள்‌. 

இலவசங்களை தவிர்ப்பது தான்‌ பொருளாதர வளர்ச்சிக்கு அடையாளம். சென்னை மக்களுக்கு அரசு நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்காது. எனது மாமியார் என்னை எப்போது முதலமைச்சராகப் பார்க்கப்போகிறேன் எனக் கேட்கிறார்” என்று பேசினார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios