நெல்லையில் ஒரே மாதத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, தடை செய்யப்பட்ட போதை வஸ்து விற்பனை என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் கடந்த ஒரு மாதத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லையில் பதற்றம்; பேருந்தை கொளுத்திய ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள்?
அதே போன்று தடை செய்யப்பட்ட கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் வைத்திருந்ததாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஈடுபட்டதாக 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருக்குறள் பற்றி ஆளுநருக்கு ஆழ்ந்த ஞானம் கிடையாது - வைகோ குற்றச்சாட்டு
கொலை, போதைவஸ்து என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..