Asianet News TamilAsianet News Tamil

திருக்குறள் பற்றி ஆளுநருக்கு ஆழ்ந்த ஞானம் கிடையாது - வைகோ குற்றச்சாட்டு

திருக்குறலில் பல ஆன்மீக கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு திருக்குறள் குறித்த ஆழ்ந்த ஞானம் கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டி உள்ளார்.
 

Governor rn ravi has not deep knowledge about thirukkural says vaiko
Author
First Published Oct 8, 2022, 2:15 PM IST

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறளில் ஆன்மீக கருத்துகள் பல இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார். ஆளுநர் ரவிக்கு திருக்குறள் குறித்தி ஆழ்ந்த ஞானம் கிடையாது.

கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

இந்துத்துவா கருத்துகளை தமிழகத்தில் புகுத்திவிட வேண்டும் என்று சங்கபரிவார் அமைப்புகள் செயல்படுகின்றன. அதற்கு துணையாக ஆளுநர் ரவியும் செயல்படுகிறார். ஆல்பர்ட் ஸ்வீட்சரை விடவா இன்னொருவர் ஆராய்ச்சி  செய்துவிட முடியும். அவர் சொல்லியிருக்கிறார் உலகிலேயே இதற்கு நிகரான மற்றொரு நூல் கிடையாது. பௌத்த மதத்தில் கூட கிடையாது. அப்படிப்பட்ட உயர்ந்த கருத்துகளை திருவள்ளுவர் சொல்லியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஸ்வீட்சர் கூறியிருக்கிறார்.

மத்திய சிறை முன்பு கூட்டம் கூட்டிய கோவை பாஜக தலைவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

அதேபோல ஜி.யு.போப்பும் சரியான வகையில் தான் திருக்குறளை மொழி பெயர்த்திருக்கிறார். அவர் ஒன்றும் தவறாக மொழிபெயர்க்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்காக ஆதரவாக ஆளுநர் செயல்படுவது துரதிஸ்டவிதமானது. 

திராவிட முன்னேற்றக் கழக அரசால் அனுப்பப்பட்ட 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் உள்ளார். தமிழக அரசின் திட்டங்களை முடக்க ஆளுநர் முயற்சிக்கிறார். பாஜகவினர் தங்கள் மனம் போன போக்கிற்கு பேசுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலையும் நடத்துவதற்கான வாய்ப்பே கிடையாது என்று தெரிவித்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios