Asianet News TamilAsianet News Tamil

தோழியுடன் பைக்கில் சென்றபோது விபத்து; இளைஞர் பலி, இளம்பெண் படுகாயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

youngman killed road accident and one person highly injured in theni district vel
Author
First Published Sep 16, 2023, 1:22 PM IST | Last Updated Sep 16, 2023, 1:22 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை மேற்கு காலனியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ஜெகன்குமார். கூலி வேலை செய்து வரும் இவர், தனது தோழியான சின்னமனூர் தனியார் வணிக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கோம்பையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் அன்னபூரணி என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வீட்டில் இறக்கி விடுவதற்காக சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது துர்க்கை அம்மன் கோவில் அருகே கம்பத்திலிருந்து தேனியை நோக்கி வந்த அரசு பேருந்தில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியதில் ஜெகன் குமார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

காவிரி விவகாரத்தில் 10 முதல்வர்களை பார்த்துவிட்டேன்; கர்நாடகாவுக்கு துரைமுருகன் கண்டனம்

மேலும் படுகாயம் அடைந்த அன்னபூரணி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் உயிரிழந்த ஜெகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சின்னமனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார் .

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios