தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் லட்சுமணன்.  இவரது மனைவி அனுசுயாதேவி (33). இந்த தம்பதியினருக்கு ‌ஷாருதர்சனா (14) என்ற மகளும், நிகில் (12) என்ற மகனும் உள்ளனர். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் ஷாருதர்சனா அதே  9-ம் வகுப்பும், நிகில் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். லட்சுமணன் ஒரு மதுபாரில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி தகராறு நிகழவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக குழந்தைகளை அழைத்து கொண்டு ராயப்பன்பட்டியில் வீடு எடுத்து அனுசுயாதேவி சென்று விட்டார். லட்சுமணன் மட்டும் கூடலூரில் வசித்து வந்தார். 

செல்போன் பேசி தண்டவாளத்தை கடந்த பெண்..! ரயில்மோதி உடல் துண்டு துண்டான பரிதாபம்..!

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனுசுயாதேவி தனது மகள் ‌ஷாருதர்சனா பிறந்த நாளை கொண்டாடினார். அதற்காக லட்சுமணனும் அங்கு வந்தார். அப்போது இருவரிடையேயும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகனை மட்டும் அழைத்து கொண்டு லட்சுமணன் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் அனுசுயாதேவியின் வீடு வெகுநேரமாக திறக்கப்படாதது கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனுசயாதேவியும் அவரது மகளும் தூக்கில் பிணமாக தொங்கினர்.

இதையடுத்து அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.  வழக்கு பதிவு செய்த காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அனுசுயாதேவியும், அவருடைய மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்களது தற்கொலைக்கு குடும்ப பிரச்சனைகள் காரணமா? அல்லது வேறேதும் இருக்கிறதா? என காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கின்றனர்.

190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!