தேனியைக் குறிவைக்கும் டிடிவி தினகரன்! முடிஞ்சா ஜெயிச்சு பாருங்க என சவால் விடும் முன்னாள் நண்பர்!

டிடிவி தினகரனின் சகாவாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன்  திமுகவில் இருக்கிறார். தேனி தொகுதியில் தீவிரமாக செயல்பட்டுவரும் அவர் திமுக சார்பில் தேனி தொகுதியில் வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

TTV Dhinakaran targeting Theni constituency! A former friend challenge him sgb

பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று பேசப்படுகின்றது. அல்லது ஓ.பன்னீர்செல்வம்  அல்லது அவரது மகன் ரவீந்திரநாத் போட்டியிட வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஆனால், டிடிவி தினகரன் போட்டியிடுவதற்கே அதிகமான வாய்ப்பு இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், டிடிவி தினகரன் தேனியில் போட்டியிட்டால் அவருக்குக் கடுமையான சவால் இருக்கும் எனத் தெரிகிறது. அதிமுகவும் திமுகவும் தேனியில் தங்கள் வேட்பாளர்களைப் போட்டியிட வைக்கும்போது வலுவான போட்டி ஏற்படும்.

இன்று வெளியாகியுள்ள தேனியில் திமுக நேரடியாக போட்டியிட முடிவு செய்துள்ளது. 2019ஆம் ஆண்டில் திமுக கூட்டணியில் தேனி தொகுதி காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்டது. அதில் கடும் போராட்டத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவின் தோல்வ அடைந்தார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

திருச்சியில் மார்ச் 24 முதல் தேர்தல் பரப்புரைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி!

TTV Dhinakaran targeting Theni constituency! A former friend challenge him sgb

டிடிவி தினகரனின் சகாவாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன்  திமுகவில் இருக்கிறார். தேனி தொகுதியில் தீவிரமாக செயல்பட்டுவரும் அவர் திமுக சார்பில் தேனி தொகுதியில் வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. டிடிவி தினகரன் தேனியில் போட்டியிட்டால் கண்டிப்பாக அவருக்கு எதிராக திமுக சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் டிடிவி தினகரனின் கூட்டாளியாக இருந்த தங்க தமிழ்செல்வனை திமுக களம் இறக்கினால் தொகுதியில் இருவருக்கும் அனல் பறக்கும் போட்டியை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் திமுகவின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள மணிமாறனும் தேனியில் போட்டியிட முயற்சி செய்கிறார்.

யார் வேட்பாளராக இருந்தாலும் டிவிவி தினகரனுக்கு அதிமுக மற்றும் திமுக சார்பில் இரண்டு வலுவான வேட்பாளர்கள் கடும் சவாலாக இருக்கப்போகிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்த நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக டிடிவி தேனி தொகுதியை மீண்டும் ஓபிஎஸ் மகனுக்கே விட்டுக்கொடுத்துவிட்டு தென்மாவட்டங்களில் வெறொரு தொகுதியைத் தேர்வு செய்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், இப்படி மூன்று முனை போட்டி ஏற்பட்டால் திமுக வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் எனவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிமுக பலவீனமான வேட்பாளரை நிறுத்தினால் போட்டி திமுகவிற்கும் டிடிவிக்கும் இடையில் வலுவாக இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு! சூரியமூர்த்தியை களமிறக்கும் கொமதேக!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios