Asianet News TamilAsianet News Tamil

Theni Lok Sabha Election Result 2024 : தேனி தொகுதியில் குருவை கடைசி வரை முந்தவிடாமல் அடித்து ஆடும் சிஷ்யன்.!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்குமா? அல்லது இண்டியா கூட்டணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. 

Theni VIP Candidate AMMK TTV Dhinakaran Lok Sabha Seat Result 2024 Updates in Tamil tvk
Author
First Published Jun 4, 2024, 9:35 AM IST

தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்  ஆரம்பம் முதலே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் சுமார் 3,25,682 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்குமா? அல்லது இண்டியா கூட்டணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படும் தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன், பாஜக கூட்டணி தரப்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்,  அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான டிடிவி. தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

இந்நிலையில் தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆரம்பம் முதலே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

 

தேனி தொகுதி வேட்பாளர்கள்:

தங்க தமிழ்செல்வன் (திமுக) -  3,97,420
டிடிவி.தினகரன் (அமமுக)-1,90,903
நாராயணசாமி (அதிமுக) - 1.08,422
மதன் ஜெயபால்(நாம் தமிழர்)- 51,309

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios