Asianet News TamilAsianet News Tamil

இறந்தே பிறந்த குழந்தை... அடக்கம் செய்ய சென்ற பெற்றோருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி...!

பிறக்கும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரோட இருப்பது தெரியவந்தது இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது. 

theni the new born  baby who was said to be dead suddenly came to life
Author
Theni, First Published Jul 5, 2021, 11:38 AM IST

பிறக்கும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரோட இருப்பது தெரியவந்தது இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்காவில் உள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ள தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போதே குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

theni the new born  baby who was said to be dead suddenly came to life

 

இதையும் படிங்க: மணப்பெண் கெட்டப்பில் மனதை அள்ளும் நயன்தாரா... கழுத்து நிறைய நகைகளுடன் சும்மா தகதகன்னு மின்னும் போட்டோஸ்...!

இதையடுத்து குழந்தையை அடக்கம் செய்வதற்காக பெரியகுளம் கல்லறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அடக்கம் செய்வதற்கு முன்பு குழந்தை உயிருடன் இருப்பது கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உயிருடன் இருந்த சிசு மீண்டும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

theni the new born  baby who was said to be dead suddenly came to life

 

இதையும் படிங்க: கண்கூசும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சி... ஸ்கின் கலர் டிரஸில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்...!

குழந்தை இறந்துவிட்டதாக கூறி தங்களிடம் காலை 8 மணிக்கு தங்களிடம் ஒப்படைத்த போது எவ்வித அசைவும் இல்லை என்றும், அதன் பின்னர் 10 மணி அளவில் அடக்கம் செய்வதற்காக கல்லறைக்கு எடுத்துச் சென்ற போது குழந்தைக்கு உயிர் இருப்பதைக் கண்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios