தேனி மாவட்டத்தில் உறுப்பு தானம் செய்த வருவாய் ஆய்வாளரின் உடலுக்கு அரசு சார்பில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வடிவேலு. இவர் கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி வடிவேலு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் வடிவேலின் உடல் உறுப்புகள் அவரது குடும்ப உறுப்பினர்களால் தானமாக வழங்கப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்களுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் வருவாய் ஆய்வாளர் வடிவேலின் உடலுக்கு அரசு மரியாதையுடன் காலை 11.30 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு உயிரிழந்த வடிவேல் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.