தேனியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ரூ.18 லட்சம் மீட்பு; தேனி எஸ் பி உரியவரர்களிடம் ஒப்படைப்பு
தேனி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ரூ.18 லட்சம் பணத்தை மீட்டு மாவட்ட எஸ்பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
தேனி அருகே அரண்மனை புதூரைச் சேர்ந்த முருகேந்திரன் என்பவரது மகன் செல்வகுமார் (வயது 27). இவர் பிஇ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மொபைல் டெலகிராமிற்கு ஒரு பெண்ணின் பெயரில் இருந்து மெசேஜ் செய்து, UBER Eats கம்பெனியின் - தொடர்பு நிறுவனத்தில் இருந்து, தொடர்பு கொண்டுள்ளனர். பிறகு ஆன்லைன் மூலம் தினமும் பணம் சம்பாதிக்கலாம் என்றும் பிரபல உணவு விடுதிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதன் மூலம் தினமும் கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும் www.u-e-gamma.com என்ற தளத்தில் சென்று பதிவு செய்து தனியாக wallet create செய்து, பின் எவ்வாறு விளையாடுவது குறித்து டெமோ செய்துள்ளனர். பிறகு ஆன்லைன் விளையாட்டிலிருந்து கமிஷன் தொகையை எவ்வாறு பெறுவது என்று கூறி அவரது அக்கவுண்டிற்கு பணத்தையும் சிறிது சிறிதாக அனுப்பி வைத்துள்ளனர்.
7 பெண்களை ஏமாற்றி திருமணம்; கணவரை கைது செய்யக்கோரி இளம் பெண் தீக்குளிக்க முயற்சி
இதை நம்பிய செல்வக்குமார் முதலில் 11 ஆயிரத்துக்கு ரீசார்ஜ் செய்து ஒரு விளையாட்டில் ஜெயித்ததற்கு கமிஷனாக ரூபாய் 17 ஆயிரத்து 800 ஐ பெற்றுள்ளார். இவ்வாறு தொடர்ந்து ரீசார்ஜ் செய்து கமிஷன் பெற்று வந்த செல்வக்குமாருக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக ஆன்லைன் சூதாட்ட காரர்கள் விளையாடி வந்துள்ளனர்.
இதனால் செல்வக்குமாருக்கு நம்பிக்கை ஏற்பட்டு, 20 ஆயிரத்தில் ரீசார்ஜ் செய்ய ஆரம்பித்து படிப்படியாக 13 லட்சத்து 32 ஆயிரத்து 490 ரூபாய் கட்டி விளையாடி ஜெய்த்துவருக்கு லாபத்தொகையாக 38 லட்சம் ரூபாய் wallet -ல் காட்டியுள்ளது. இந்த தொகையை செல்வக்குமார் கேட்டுள்ளார். இதற்கு சூதாட்டக்காரர்கள் மீண்டும் ரூ.17 லட்சம் கட்ட சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்த செல்வகுமார் கடந்த மாதம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் எஸ்ஐ தாமரைக்கண்ணன் குழுவிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆன்லைனில் சூதாட்டத்தில் விடப்பட்ட 13 லட்சத்து 32 ஆயிரத்து 490 தொகையை, ஆன்லைன் மூலமாகவே மீட்டு நேற்று தேனி எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி டோங்கரே பிரவீன் உமேஷ் உரியவரிடம் ஒப்படைத்தார்.
இதேபோன்று தேனி நகர் பகுதியைச் சேர்ந்த திருமணம் முடிந்த பெண் ஆன்லைன் மூலமாக இழந்த ரூ.4 லட்சத்து 79 ஆயிரம் தொகையையும் மீட்டு எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்.