சுட்டெரிக்கும் வெயில்; தேனி அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பயங்கர காட்டு தீ - அரியவகை மரங்கள் எரிந்து நாசம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்  அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையை ஒட்டியுள்ள, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டு தீயால் அரியவகை மரங்கள், மூலிகை தாவரங்கள் தீயில் கருகி வருகின்றன.

Rare trees were destroyed in a fierce forest fire in the Western Ghats near Theni vel

தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையை ஒட்டியுள்ள, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான ஒண்டிவீரப்பன் கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று மாலை நேரத்தில் பற்றிய காட்டுத்தீயானது நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்து வருகிறது. பகல் நேரத்தில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுவதன் காரணமாக இந்தக் காட்டு தீயானது தொடந்து மேல்நேக்கி எரிந்து வருவதால் வனவளங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

சென்னையில் பிரபல உணவகத்தில் காவலரை வெளுத்து வாங்கிய வட மாநில ஊழியர்கள்..அலறி அடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்

மலையின் உச்சி முதல் சமதளம் வரை பற்றி எரிந்து வருகிறது. இரவு நேரத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயானது காண்போரை அச்சமடைய செய்யும் வகையில் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இரவு நேரம் என்பதாலும், பரவலாக காட்டுத் தீ பற்றி எரிவதால் வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தீ தொடந்து எரிந்து வருகிறது.  

வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர்.. பிறந்த பச்சிளம் குழந்தையின் கால்களை வெட்டிய கொடூரம்

இதனால் வனப்பகுதியில் அரிய வகை மரங்கள், மூலிகை தாவரங்கள்,  பறவையினங்கள், அரியவகை உயிரினங்கள் பாதிப்படைவதோடு பற்றி எரியும் காட்டுத்தீ  காரணமாக வனப்பகுதிகளில் இருந்து தப்பி வரும் வனவிலங்குகள்  பொட்டிப்புரம், புதுக்கோட்டை, சூலப்புரம் உள்ளிட்ட மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios