தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு..! அதிரடி உத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியர்!
நாளை முதல் தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.
![junta curfew announced in theni district junta curfew announced in theni district](https://static-gi.asianetnews.com/images/01ebgytjt1cdjd6bk64fr0dsqf/download-jpg_363x203xt.jpg)
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,603ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 6 நாட்களுக்கு மேலாக 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது தமிழக மக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களால் இயன்ற வரை கொரோனா வைரஸை முழு முயற்சியுடன் எதிர்கொண்டு வருகிறார்கள். இவர்களின், முயற்சிக்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக இருக்கும் சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில், நாளைகாலை 6 மணி முதல் தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமலில் வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த, ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.