‘ஷூ’வுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... நூலிழையில் உயிர் தப்பிய சிறுமி..!

தேனி மாவட்டம் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் அவந்திகா (9) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவந்திகா தனது ‘ஷூ’ வை வீட்டுக்கு வெளியே கழற்றி போடுவது வழக்கம். இந்நிலையில், வழக்கும் போல காலை பள்ளிக்கு செல்வதற்காக அவள் தனது புத்தக பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

good snake hidden in student shoe

தேனி அருகே ‘ஷூ’ வுக்குள் பாம்பு பதுங்கி இருந்ததை பள்ளி சிறுமி முன்கூட்டியே கவனித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

தேனி மாவட்டம் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் அவந்திகா (9) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவந்திகா தனது ‘ஷூ’ வை வீட்டுக்கு வெளியே கழற்றி போடுவது வழக்கம். இந்நிலையில், வழக்கும் போல காலை பள்ளிக்கு செல்வதற்காக அவள் தனது புத்தக பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

good snake hidden in student shoe

பின்னர், அவசர, அவசரமாக தனது ‘ஷூ’வை எடுத்து காலில் மாட்ட முற்பட்ட போது புஸ்ஸ்ஸ் என்ற சத்தம் கேட்டது மற்றும் ‘ஷூ’வுக்குள் ஏதோ இருப்பதை உணர்ந்தாள். இதனையடுத்து, அந்த சிறுமி ‘ஷூ’வை அணியாமல் அதன் உள்ளே பார்த்தபோது அதில் ஒரு பாம்பு சுருண்ட நிலையில் பதுங்கி இருந்தது. இதனால், பயந்து சிறுமி அலறி கூச்சலிட்டார். பின்னர், அந்த ‘ஷூ’வை சிறுமி தூக்கி எறிந்துள்ளார். 

good snake hidden in student shoe

பின்னர், சிறுமியின் பெற்றோர், பாம்பு பதுங்கியிருந்த ‘ஷூ’வின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து மூடினர். மேலும் இதுகுறித்து பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவர், ‘ஷூ’வுக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடிக்க சென்ற போது புஸ்ஸ்ஸ் படம் எடுத்து ஆடியது. பின்னர், அந்த பாம்பை பிடித்து தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் கொண்டுப்போய் விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios