Asianet News TamilAsianet News Tamil

அணை பகுதிகளில் தொடர் மழை; முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

Due to continuous rains the amount of water coming into the Mullai Periyar Dam has increased vel
Author
First Published Sep 4, 2023, 12:09 PM IST | Last Updated Sep 4, 2023, 12:09 PM IST

தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய நிலங்களுக்கான பாசன வசதிகளுக்கு நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக 14 ஆயிரத்து 707 ஏக்கருக்கு 200 கன அடி நீரும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீரும் என பெரியாறு அணையில் இருந்து 120 நாட்களுக்கு தினசரி 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்; களத்தில் இறங்கிய மேற்கு மண்டல ஐஜி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனியில் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அணையின் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்தது. சில நேரங்களில் நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இன்றி பாதிப்புக்கு உள்ளாகினர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன்; மீட்கச்சென்ற மனைவி, உறவினருக்கு நேர்ந்த சோகம் - தேனியில் பரபரப்பு

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் அணையின் நீர் வரத்து இன்றி காணப்பட்ட நிலையில் இன்று அணையின் நீர்வரத்து 620 கன அடியாக உயர்ந்தது தற்போது அணையில் 118.25  அடி நீர் உள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 300 கன அடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது போல் மழை தொடர்ந்து பெய்து வந்தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தடை இன்றி வரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios