கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டுமானத்தின் போதே இடிந்து விழுந்த கட்டிடம்; ஒருவர் பலி, இருவர் படுகாயம்

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

construction worker killed while building collapsed at cumbam government hospital in theni vel

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 10 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக புதிய கட்டிடம் அமைக்கும் பணியில் வெளி மாவட்ட பணியாளர்கள் ஏராளமானோர் நாள் தோறும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன், முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் ஆகியோர் புதிய கட்டிடத்தில் உள்ள போர்டிகோ மற்றும் எலிவேஷன் பகுதியில் கட்டிடப் பணிகளை செய்து கொண்டிருந்தனர். திடீரென அந்த கட்டிடம் இடிந்து அவர்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கவனிப்பதில் அலட்சியம்? ஒரே ஸ்ட்ரெச்சரில் 2 கர்ப்பிணிகள்

இது குறித்து அருகில் பணிபுரிந்த பணியாளர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி நம்பிராஜனை உயிரிழந்த நிலையில் மீட்டனர். மேலும் உடன் பணிபுரிந்த முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூரில் சடங்கு சம்பிரதாயங்களை தகர்த்து மூதாட்டியின் உடலை தகனம் செய்த பெண்கள்

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக கட்டி வரும் இந்த மருத்துவமனை கட்டிடத்தில்  உரிய தளவாடங்களை சரிவர பயன்படுத்தி கட்டிடம் கட்டாததால் புதிய கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உடன் பணிபுரிபவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios