Asianet News TamilAsianet News Tamil

பெற்றோர் ரயிலில் அழைத்துச் செல்லாததால் ஏமாற்றம்; கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுவன் தற்கொலை

தேனியில் பெற்றோர் ரயிலில் அழைத்துச் செல்லாததால் ஏமாற்றம் அடைந்த 15 வயது சிறுவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

15 years old boy hanged death in theni district vel
Author
First Published Oct 13, 2023, 7:17 AM IST

தேனி மாவட்டம் போடி கீழத்தெரு, பேச்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் ராமகிருஷ்ணன், ஜெயா தம்பதியர். இவர்களுக்கு  முத்து, பாலாஜி என இரு மகன்கள் உள்ளனர். தந்தை ராமகிருஷ்ணன் கூலி வேலை செய்து வருகிறார். தாய்  ஜெயா ஏலக்காய் கடைக்கு வேலைக்கு செல்கிறார்.  இளைய மகன் பாலாஜி போடியில் ரயில்வே பணிகள் தொடங்கியதில் இருந்தே நண்பர்களுடன் இணைந்து பள்ளிக்கு செல்லாமல் போடி ரயில் நிலையத்தை நாள்தோறும் சுற்றி சுற்றி வந்துள்ளார். 

15 years old boy hanged death in theni district vel

இந்நிலையில் ரயில் சேவை துவங்கியதைத் தொடர்ந்து ரயில் பயணிகள், குழந்தைகளுடன் சென்று வருவதை நாள்தோறும் பார்த்து வந்துள்ளார். ரயில் பயணிகள் செல்வதைப் போல் தமது பெற்றோரும் சென்னை, மதுரைக்கு அழைத்து செல்ல அடிக்கடி அவர்களிடம் வற்புறுத்தி வந்துள்ளார். சரியாக படிக்காமல் வீட்டிலே இருந்து வந்த பாலாஜி நாள் தோறும் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் செல்வதை கண்டு தானும்  பெற்றோருடன் பயணிக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்து வந்துள்ளார்.

இழப்பீடு வழங்குவதில் மெத்தனம்; 10 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்ட நீதிபதி - வேலூரில் பரபரப்பு

பெற்றோர்கள் இருவரும் நாள் தோறும் கூலி வேலைக்கு சென்று விடுவதால் பாலாஜியின் ஏக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி பாலாஜி ரயில் மீது தன் கொண்ட ஏக்கத்தை உருக்கமான கடிதமாக எழுதி வைத்து அண்ணனையாவது நன்றாகப் பார்த்து கொள்ளுங்கள் என கூறி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.  மாலை 4 மணி அளவில் ஏலக்காய் கடையிலிருந்து பணியை முடித்துக் கொண்டு திரும்பிய ஜெயா வீட்டை திறந்து பார்த்த போது சேலையால் தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

15 years old boy hanged death in theni district vel

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைத் தொடர்ந்து போடி நகர் காவல் துறையினர் பாலாஜியின் உடலைக் கைப்பற்றி போடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவன் கடிதம் எழுதி வைத்ததை கைப்பற்றி பெற்றோர்களுடன் ரயில் பயணம் செய்ய முடியாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யபட்டு பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சொத்து தகராறில் தம்பியை தீ வைத்து கொன்ற அண்ணன்; நெல்லையில் பரபரப்பு

கூலி வேலைக்காக தாய், தந்தை இருவரும் நாள்தோறும் சென்று வரும் நிலையில் குழந்தைகளை சரிவர பராமரிக்காமல்  அவர்களின் சிறு ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிலை காரணமாக தற்போது இந்த 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். ரயில் மீது கொண்டுள்ள அதீத ஆசை ஏக்கம் காரணமாக இந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு போடி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios