தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (59). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமிக்கு சிகிச்சை அளிப்பதற்காக  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். 

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற வழியில் விபத்தில் சிக்கி கணவர் கண்முன்னே மனைவி உடல்நசுங்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (59). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமிக்கு சிகிச்சை அளிப்பதற்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். இருசக்கர வாகனம் தஞ்சாவூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. நீ எந்த ஊர்? என்ன ஜாதி? கேட்டு பள்ளி மாணவன் மீது கொடூர தாக்குதல்..!

இதில் நிலை தடுமாறிய ஜெயலட்சுமி கீழே விழுந்தார். அவர் மீது கல்லூரி பேருந்து ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். கமலநாதனுக்கும் காயம் ஏற்பட்டது. தன் கண்முன்னே மனைவி இறந்ததை பார்த்து கமலநாதன் கதறி துடித்தார். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ.. நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் படுகாயம்..!