Asianet News TamilAsianet News Tamil

பொய் சொல்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா? தனது வீட்டில் தாமே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய நபர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே எதிர்வீட்டில் உள்ளவர்களை பலிவாங்குவதற்காக தனது வீட்டிற்கு தாமே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பொய்யாக நாடகமாடிய நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

man arrested who throw a petrol bomb into own house and file a fake allegations at police station in thanjavur district vel
Author
First Published Sep 7, 2023, 8:22 PM IST

கும்பகோணம் அருகே துக்காட்சி சன்னதி தெருவில் வசித்து வருபவர் சுல்தான் அப்துல் சமது. இவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். பாக்கியராஜ், ராஜீவ் காந்தி என்பவர்கள்  சுல்தான் அப்துல் சமதுவின் தோட்டத்திற்கு எதிரே 30 வருடமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இவர்களை காலி செய்வது தொடர்பாக பாக்கியராஜ், ராஜீவ் காந்தி மற்றும் சுல்தான் அப்துல் சமது இடையே பல நாட்களாக தகராறு இருந்துள்ளது. 

இந்நிலையில், நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் சுல்தான் அப்துல் சமது அளித்த புகாரில் தனது வீட்டில் பாக்கியராஜ் மற்றும் ராஜீவ் காந்தி பெட்ரோல் குண்டு வீசியதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இது பொய்யான குற்றச்சாட்டு என்பதை உறுதிபடுத்தினர்.

ஓரமா நடந்துபோனது குத்தமா? குடிச்சிட்டு வந்து இப்படி பண்ணீட்டீங்களே - பொதுமக்கள் குமுறல்

இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளரான சுல்தான் அப்துல் சமதுவை திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் நாச்சியார் கோவில் ஆய்வாளர் ரேகா ராணி துரித விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெட்ரோல் குண்டுக்கு பதிலாக மண்ணென்ணை ஊற்றிய பாட்டில்கள் இருப்பதை பார்த்த காவல்துறையினர் சந்தேகம் வர சுல்தானிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் எதிர் வீட்டில் இருப்பவர்களை பலி வாங்குவதற்காக தாமே தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது.

கெத்துக்காக இப்படிலாமா செய்வீங்க? கொத்தாக அள்ளிச்சென்ற காவல்துறை

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் வெடிகுண்டு வீசிவிட்டு பொய் புகார் அளித்த சுல்தான் அப்துல் சமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios