ஓரமா நடந்துபோனது ஒரு குத்தமா? குடிச்சிட்டு வந்து இப்படியா பன்னுவீங்க - பொதுமக்கள் குமுறல்
தருமபுரி மாவட்டத்தில் சாலையோரம் நடந்து சென்ற நபரை அவ்வழியாக வந்த கார் வேகமாக முட்டி சிறிது தூரம் இழுத்துச் செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எருமியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னாகவுண்டர் மகன் பழனிச்சாமி (வயது 63). அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பழனிச்சாமியின் பின்னால் அரூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு காரின் முன் பாகத்தின் மீது விழுந்த பழனிச்சாமியினை சுமந்தவாறு கார் சிறிது தூரம் சென்று பழனிச்சாமியின் வீட்டின் முன் நின்றது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் காரில் வந்த இருவரையும் பிடித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் கார் ஓட்டி வந்த நபர் சின்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (50) என்பதும், மது போதையில் காரை இயக்கியதும் தெரியவந்தது.
கெத்துக்காக இப்படிலாமா செய்வீங்க? கொத்தாக அள்ளிச்சென்ற காவல்துறை
மேலும் இந்த விபத்தில் கால் மற்றும் கை பகுதியில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனிச்சாமி மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளான பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.