மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்.. காவிரி உரிமை மீட்பு குழுவினர் ரயில் மறியல் போராட்டம்..!
உச்சநீமன்றம் உத்தரவுப்படி உரிய காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடகா அரசு மற்றும் நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வாங்க கோரியும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழுவினர் தஞ்சை பூதலூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீமன்றம் உத்தரவுப்படி உரிய காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடகா அரசு மற்றும் நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வாங்க கோரியும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க;- பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிக்காக காவிரித் தாயே கண்ணீர் வடிப்பாள் - ராமதாஸ் இரங்கல்
பின்னர் காவிரி நீர் வழங்காத கர்நாடகா, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் விரைவு ரயிலை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனையடுத்து அரைமணி நேரம் தாமதமாக சோழன் விரைவு ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க;- பெங்களூருவில் முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு மாலை போட்டு ஒப்பாரி! திதி கொடுத்த கன்னட அமைப்பினர்! வைரல் வீடியோ!