தஞ்சை அரசு மருத்துவமனையில் மேற்கூரை சிமெண்ட் விழுந்ததில் நோயாளியை பார்க்க வந்த 2 பேர் படுகாயம்

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் நோயாளியின் உறவினர்கள் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 attenders injured as roof collapses at Tanjore Government Hospital

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்ததாகும். இங்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கட்டிடமாகும். அவசர  சிகிச்சை பிரிவில் இருந்து முதற்கட்ட உள்நோயாளியாக  இந்த இரண்டு வார்களில் தான் அனுமதிக்கப்படுவார்கள். 

2 attenders injured as roof collapses at Tanjore Government Hospital

நான்காவது வார்டு பெண் நோயாளிகளும், ஐந்தாவது வார்டு ஆண் நோயாளிகளும் அனுமதிக்கப்படுவர். பின்னர் நோயின் தன்மைக்கு ஏற்ப பிற வார்டுகளுக்கு மாற்றப்படுவார்கள்.  இந்த நிலையில் வார்டை ஒட்டியுள்ள வராண்டா பகுதியில் நோயாளின் உறவினர்கள் காத்திருப்பார்கள். அதுபோல காத்திருந்தபொழுது மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. 

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாததால் பேருந்து நடத்துநரை கொலைவெறியுடன் தாக்கிய 5 பேர் கைது

இதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும், பாபநாசத்தைச் சேர்ந்த மற்றொரு கார்த்தி என்பவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கட்டடம் மிகவும் பழமைவாய்ந்தது என்பதால் கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமுக ஆர்வலriகள் கோரிக்கை வைக்கின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி 3 பேர் கவலைக்கிடம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios