இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாததால் பேருந்து நடத்துநரை கொலைவெறியுடன் தாக்கிய 5 பேர் கைது
கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்திற்கு வழி விடவில்லை என்று கூறி இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
கும்பகோணத்தில் இருந்து திருவிடைசேரிக்கு நேற்று மாலை தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்து நாச்சியார் கோவில் அருகே கூகூர் என்ற இடத்தில் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் ஐந்து நபர்கள் வேகமாக வந்துள்ளனர். பேருந்தின் ஓட்டுநர் மோட்டார் சைக்கிளுக்கு வழி விடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிள் வந்த ஐந்து நபர்கள், பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றதும், நடத்துநர் அருண்குமாரை, மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து நபர்கள் தாக்கினார்கள். நடத்துனர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. பதிவான காட்சிகளைக் கொண்டு நடத்துனர் அருண்குமார் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி 3 பேர் கவலைக்கிடம்
கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கூகூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்களை சம்பவம் நடைபெற்ற ஓரிரு மணி நேரத்திற்குள் நாச்சியார் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி தலைமையில் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழழகன், ரவிச்சந்திரன், பாண்டியன், மகேஷ் பாபு, மற்றும் பவித்ரன் ஆகிய ஐந்து நபர்களை நாச்சியார் கோவில் காவல் நிலையத்தார் மருத்துவ பரிசோதனை முடித்து கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
நீலகிரியில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொண்ட 2 காட்டு யானைகள்