சேலத்தில் காதலியின் உறவினர்கள் மிரட்டியதால் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் பட்டப் படிப்பை முடித்துவிட்டு கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையே ரவிசங்கர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் காதலை பிரித்து வைத்ததோடு, தன்னை மிரட்டியதாக வீடியோவில் பேசியுள்ள ரவிசங்கர் அதை நேற்று வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டார். 

இந்நிலையில் ரெட்டிப்பாளையம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி அவர் கீழே குதித்து இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.