தமிழகத்தில் முதல்முறையாக ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு... சேலத்தை செழிப்பாக்கும் முதல்வர் எடப்பாடி..!
தமிழகத்தில் முதல்முறையாக கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் முதல்முறையாக கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திறந்து வைத்தார்.
சேலம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், சேலம் ஐந்து சாலையில் 7.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி வரையிலும் குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலும் ரூ. 441 கோடியில் உயர்நிலை மேம்பாலம் கட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்திருந்தார்.
இத்திட்டம் பணி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக ஈரடுக்கு மேம்பாலமாகக் கட்டுப்பட்டு வருகிறது. சுமார் 6 புள்ளி 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு 173 தூண்களுடன் பிரமாண்டமாகவும் நவீன தொழில்நுட்பத்துடனும் உருவாகி வரும் இந்த பாலத்தின் ஒருபகுதியில் பணிகள் முடிவடைந்தன.
அதாவது ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டிவரை சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த மேம்பாலம் தமிழகத்தின் மிக நீளமான பாலமாகும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த மேம்பாலத்தை இன்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.