கொரோனா அறிகுறி? தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை இழந்த மாரியப்பன் தங்கவேலு..!

தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் வழிநடத்தி செல்வார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொடக்க விழா முன்பாக நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் மாரியப்பனுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

Tokyo Paralympics... Mariyappan Thangavelu in Quarantine

டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மாரியப்பன் தங்கவேலுவுக்கு கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக்போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாராலிம்பிக் போட்டில் அந்நகரில் இன்று தொடங்க உள்ளன. செப்டம்பர் 5ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர், வீராங்கணைகள் பங்கேற்கின்றனர். உடற்திறன் பாதிப்புக்கு ஏற்ப, ஒரே விளையாட்டு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கும். இதனால் 22 விளையாட்டில் 539 பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன.

Tokyo Paralympics... Mariyappan Thangavelu in Quarantine

இதில், தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் வழிநடத்தி செல்வார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொடக்க விழா முன்பாக நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் மாரியப்பனுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. டோக்கியோவிற்கு விமானத்தில் சென்ற போது ொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் அவர் நெருக்கமாக பழகி இருந்ததாகவும் தெரிகிறது. 

Tokyo Paralympics... Mariyappan Thangavelu in Quarantine

இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் மாரியப்பனுக்கு  6 முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கும் நிலையிலும், அனைத்து முறையும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதாகவே தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடக்க விழாவில் அவரை தனிமைப்படுத்திக்கொள்ள போட்டியின் அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டேக் சந்த்  தேசியக் கோடியை ஏந்தி சென்றார். முந்தைய ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் பதக்கம் வென்று சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios