சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிரமாக இருக்கின்றன . அதற்கான நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டன . இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது . இந்த  நிலையில் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம் .

அதன்படி நிலம் கையகப்படுத்துவதற்கு விரிவான திட்டம் தீட்டப்பட்டதா ?? அதற்கான நடைமுறைகள் என்னென்ன ? சுற்றுச்  சூழலிடம் அனுமதி பெறப்பட்டதா ? இல்லையெனில் எப்படி நிலம் கையகப்படுத்துகிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது .

மேலும் அவசியமான திட்டம் என்று கூறும் மத்திய அரசு , சுற்றுச் சூழல் அனுமதி பெற ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது  என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது . இந்த திட்டமே குழப்பமாக இருப்பதாகவும் செப்டம்பர் 4 ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை உடனே தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது .