சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மகள் ஊர்மிளா. 23 வயது இளம்பெண்ணான இவர் பொறியியல் படிப்பு முடித்திருக்கிறார். சென்னை நாவலூரில் இருக்கும் கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு மகளிர் விடுதியில் தோழிகளுடன் தங்கியிருந்த அவர் அங்கிருந்து பணிக்கு சென்றிருக்கிறார்.

நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர் கம்பெனியில் இருந்தார். அப்போது மதியம் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. வெகுநேரமாக போனில் பேசிக்கொண்டிருந்த அவர் பதட்டமாக காணப்பட்டார். போனை வைத்த பிறகு யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்த ஊர்மிளா நேராக கம்பெனி அமைந்திருக்கும் கட்டிடத்தின் 5 வது மாடிக்கு சென்றார். அங்கு சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று மேலிருந்து கீழே குதித்தார்.

இதில் பலத்தகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பலியான ஊர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் உயிரிழந்த ஊர்மிளாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் ஊர்மிளாவின் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் அது பிடிக்காமலே அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

10ம் வகுப்பு மாணவியை சீரழித்து சித்தரவதை செய்த 17 வயது சிறுவன்! 6 நாட்கள் அடைத்து வைத்து அனுபவித்த கொடூரம்..!