அதிமுக சார்பாக அம்மா உணவகங்களில் இலவச உணவு..! சேலத்தில் முதல்வர் அதிரடி..!

சேலம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மதிய உணவு அதிமுக சார்பாக இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அவற்றுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

Salem Admk will distribute free food for people in Amma Canteens, says cm palani samy

இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 49 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை  1,372 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக இருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Salem Admk will distribute free food for people in Amma Canteens, says cm palani samy

அதை நிவர்த்தி செய்ய அரசு சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இருக்கும் அம்மா உணவகங்கள் அனைத்தும் முழுநேரமும் செயல்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கப்பட்டு பார்சல் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதியிலும் அம்மா உணவகங்கள் மூன்று நேரமும் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. இந்த நிலையில் சேலத்தில் இருக்கும் அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20 முதல் ஊரடங்கில் தளர்வு..! போக்குவரத்து துறைக்கு அவசர சுற்றறிக்கை..!

Salem Admk will distribute free food for people in Amma Canteens, says cm palani samy

சேலம் மாநகராட்சி பகுதியில் 11 மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் 4 அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மதிய உணவு அதிமுக சார்பாக இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அவற்றுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். நாளை முதல் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. இது சேலம் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே சேலம் பகுதியில் இருக்கும் அம்மா உணவகங்களில் மாநகராட்சி சார்பாக மதிய உணவுடன் இலவச முட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios