சேலம் வந்தது 1000 ரேபிட் டெஸ்ட் கருவிகள்..! பரிசோதனைகள் தொடக்கம்..!

சேலம் மாவட்டத்திற்கு 1000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்து சேர்ந்துள்ளது. சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருக்கும் ஆயிரம் கிட்டுகள் மூலம் தற்போது பரிசோதனை தொடங்கி இருக்கிறது

rapid test kids reached salem


உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 14,387 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 480 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

rapid test kids reached salem

இந்த நிலையில் பரிசோதனைகள் விரைவாக மேற்கொள்ள தேவையான ரேபிட், பிசிஆர் கருவிகள் போன்றவை குறைவாக இருப்பதால் தினமும் குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கே பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள தேவையான கருவிகளை சீனாவிடம் இந்தியா ஆர்டர் செய்தது. அதன்படி சீனாவில் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தன. அவற்றில் நேற்று 24 ஆயிரமும் இன்று 12 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளும் தமிழகம் வந்துள்ளது.

rapid test kids reached salem

தற்போது ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்திருப்பதால் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள இயலும். பாதிப்புகளின் அடிப்படையில் தமிழக மாவட்டங்களுக்கு அவை பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு 1000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்து சேர்ந்துள்ளது. சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருக்கும் ஆயிரம் கிட்டுகள் மூலம் தற்போது பரிசோதனை தொடங்கி இருக்கிறது. இதன்மூலம் விரைவாக கொரோனா பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios