24 மணிநேரத்தில் தமிழகத்தில் மீண்டும் மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் நிறைவு பெற்றது. அதன்பிறகு குளிர்காலம் தொடங்கியது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரும் பகல் நேரத்தில் வெயிலும் வாடி வதைக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தின் சில பகுதிகளில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. இது மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.
ரவுடியின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த திமுக பிரமுகர்..! சரமாரியாக வெட்டிப்படுகொலை..!
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதுங. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 செ.மீ மழையும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், நெல்லை மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு வானிலை மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.