பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் இருக்கும் சபரிராஜனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு சிறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சபரிராஜன்(25), வசந்தகுமார்(29) திருநாவுக்கரசு(27), மணிவண்ணன்(27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 இவ்வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கைதான ஐந்து பெரும் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், சிறையில் உள்ள சபரிராஜனுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சபரிராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.