குடிமகன்கள் கஷ்டத்தை அறிந்த தமிழக அரசு நாளை டாஸ்மாக் கடையை திறக்க உள்ள நிலையில், அந்த கடைக்கு  எவ்வளவு பாதுகாப்பு என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. சமூக இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இதனை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் முன்பு யாரும் கூட்டமாக திரளக்கூடாது என்றும் அப்படி கும்பலாக கூடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு டாஸ்மாக் கடைகள் முன்பு வட்டங்களும் போடப்பட்டுள்ளன. பல இடங்களில் நீண்ட வரிசையில் நிற்பதற்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை நாளை காலை 10 மணிக்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ள நிலையில் எவ்வளவு பாதுகாப்பு என்ற விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ள நிலையில் எவ்வளவு பாதுகாப்பு என்ற விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

* ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு

*  இருப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தில் 4 காவலர்கள், 4 ஊர்க்காவல் படையினர் இருக்க வேண்டும். 

* அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் பாதுகாப்பு விவரங்களை அந்தந்த பகுதி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும். 

* ஒரு பஞ்சாயத்துக்கு 2 பறக்கும்படைகள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

* ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

* கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

* ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும்.

* 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.