கைவிட்ட மழை..! இனி வறண்ட வானிலை தான்..!

அடுத்த வரும் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

no rain for next 5 days

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை ஜனவரி 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த போதும் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான அளவில் மழை பதிவாகியிருக்கிறது. இதனால் வரும் கோடைகாலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பருவ மழை நிறைவடைந்து விட்டபோதும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

no rain for next 5 days

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அடுத்த வரும் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. மலையை ஒட்டிய பகுதிகளில் அதிகமான பனிப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

no rain for next 5 days

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல சென்னையில் அதிகபட்ச வெப்பம் 31டிகிரி செல்சியாசாகவும், குறைந்தபட்சம் 20 டிகிரியாக பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: 'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios