Asianet News TamilAsianet News Tamil

தடுக்க நினைத்த கன்னடர்களை தாண்டி கரைபுரண்டு வந்த காவிரித் தாய் - விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன . இதன் காரணமாக தமிழகத்திற்கு அதிகப்படியான நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் , மேட்டூர் அணையை பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று திறந்து வைத்தார் .

mettur dam opned
Author
Tamil Nadu, First Published Aug 13, 2019, 1:56 PM IST

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன . இதன் காரணமாக தமிழகத்திற்கு அதிகப்படியான நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் , மேட்டூர் அணையை பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று திறந்து வைத்தார் . mettur dam opned
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி நெற்களஞ்சியமாக விளங்க முக்கிய ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை நீர் பாசனமாகும். அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க இயலாத நிலை ஏற்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கிவிட் டது. நீர்வரத்தும் வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருக்கிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 62 டிஎம்சியாக இருக்கிறது.

mettur dam opned

மேட்டூர் அணை வேகமாக நிரம்பிவரும் நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங் களில் கர்நாடக நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைக்கும் நீரை எதிர் நோக்கியும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, மேட்டூர் அணையில் இருந்து நெல் சாகு படிக்கென ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) நீர் திறக்கப்படும். நானே நேரில் சென்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறேன்.

இதன்மூலம் காவிரி மற்றும் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்படும். அதன் வாயிலாக பாசனத்துக்கு மட்டுமின்றி நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த முடியும். வேளாண் பெருமக்கள் நீரை அனைத்து கால்வாய்கள், தடுப்பணைகள் வாயிலாக நீர் மேலாண்மை செய்து பாசனத் துக்கு பயன்படுத்த வேண்டும்.

mettur dam opned

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios