மாம்பழ சீசன் ஆரம்பித்ததில் இருந்தே திண்டுக்கல், நத்தம், சேலம், தர்மபுரி, ஒசூர், துவரக்குறிச்சி ஆகிய பகுதிகளிலிருந்து  மாம்பழங்களின் வரத்தானது குறைந்திருக்கிறது. 

கோடை காலமானாலே பழங்களில் யாபகம் வருவது மாழ்பழம்தான். ஆனால் வரத்தானது போதுமானதாக இல்லை. எனவே இவ்வாண்டில் மாம்பழங்களின் விலை 30-40 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக மாம்பழ வியாபாரிகள் கூறுகிறார்கள். அதிலும் சில மாம்பழ ரகங்களின் ரூ.50 வரையில் உயர்ந்திருக்கிறது என்கிறார்கள் பழ வியாபாரிகள். பழ வியாபாரிகளிடம் பேசினோம். “சென்ற ஆண்டின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் குறைவான மழைப்பொழிவு இருந்ததால்தான் மாம்பழ விளைச்சல் குறைந்தேவிட்டது. 

மாமரத்தில் பூவானது பூக்கும் பருவத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டதன் விளைவால் விளைச்சல் 70 சதவிகிதம் குறைந்து இருக்கிறது. மேலும் தமிழக புயலும் உற்பத்திக்குக ஒரு காரணமாக சொல்லலாம். சேலம்,கிருஷ்ணகிரி,திண்டுக்கல்,நத்தம்,தர்மபுரியில் இருந்து கடந்த பல ஆண்டுகளாகவே மாம்பழங்கள் தமிழகம் முழுவதும் வருகின்றன” என சொல்கிறார்கள். மாம்பழ தோட்ட உரிமையாளர்களோ “இந்தாண்டு மாம்பழ விளைச்சல் குறைவாகவே இருக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். 

ஆனாலும் மாம்பழங்களுக்கு நல்ல விலைக்கு போகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நினைத்ததற்கு மாறாகஎதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை மற்றும் எங்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று வியாபாரிகள் அவற்றை அதிகமான விலைக்கு சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள்”என முடித்தார்கள்.