சேலத்தில் காருக்குள் நிர்வாணமாக காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் சுரேஷ் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

இந்நிலையில், கோபிக்கு சொந்தமான கார் ஷெட்டின் கதவு லேசாகத் திறந்திருப்பதைக் கண்டு அவரது நண்பர்கள் அங்கு சென்று பார்த்த போது சுரேஷ் ஒரு இளம் பெண்ணுடன் சடலமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் சுரேஷுடன் இருந்த இளம்பெண் அப்பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவின் என்பவரின் மகள் ஜோதிகா என்பது தெரியவந்தது. தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். சுரேஷ் மற்றும் ஜோதிகா கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் என்பது தெரிவந்துள்ளது. 

மேலும், இவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. அதனால் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு இறுதியாக தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது மூச்சடைத்து உயிரிழந்தார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.